வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் இன்று (23.05.2017) மாலை 5.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக மேலும்
தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு அருகே குருமன்காட்டிலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் ( குருமன்காடு மஸ்தான் அரிசி ஆலையின் முகாமையாளர் சேகர் வயது -28) படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக