இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள்
பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் 35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானத்திற்கு முன் வந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முச்சக்கர வண்டிகளினால் ஏற்படுகின்ற விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக