புதன், 17 மே, 2017

உயர் தரத்துக்கு தெரிவாகாத 4000மாணவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதி, உயர் தரத்துக்குத் தகுதி பெறாத 4000 மாணவர்கள் தொழில் கல்விக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் உயர் தர வகுப்புக்களில் உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாணவர்களுக்காக 40 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. உயர் தரத் தொழில் கல்விக்காக 26 பாட விதானங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த சகல பாடவிதானங்களையும் எதிர்வரும் உயர் தர வகுப்பில் அறிமுகம் செய்வதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது. 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates