சனி, 13 மே, 2017

அறிமுகமாகின்றது இலங்கையில் அதிநவீன பேருந்து!

navinabu2
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது. இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட அம்சமாகும். அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட நவீன பேருந்தில் படுக்கை அறை, குளிக்கும் அறை, உணவு அறை மற்றும் வீட்டு பொருட்கள் அடங்கிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கு சபாரி ரக மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துவதற்கான நிறுத்துமிட வசதியும் காணப்படுகின்றது. 40 அடி நீளமான இந்த பஸ் வண்டி இலங்கை பெறுமதியில் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா துறைக்கு சொந்தமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரினால் இந்த பேருந்த இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

navinabu3

navinabu2

navinabu1

navinabus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates