ஞாயிறு, 9 ஜூலை, 2017

யாழ் உரும்பிராயில் அநாதரவாக நின்ற வாகனத்தில் பணம் நகைகள் மீட்பு

உரும்பிராயில அநாதரவாக நின்ற ஹைஏஸ் ரக வானில் இருந்து பணம், நகைகள், கடவுச்சீட்டு என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு ஞான சம்பந்தர் சாலையில் சில நாள்க ளுக்கு முன்னர் இடம்பெற்றது. இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவித்ததாவது:“வீடு ஒன்றினுள் நள்ளிரவு ஒரு மணியளவில் யாரோ ஒருவர் உள்நுழைவதை 
அவதானித்த வீட்டு உரிமையாளர் கூக்குரலிட்டு அயல வர்களின் உதவியை நாடி யுள்ளார். அப்பகுதி இளைஞர்கள் குறித்த நபரைப் பிடிப்பதற்கு முயற்சித்த போதும் அவர் தப்பியோ டியிருந்தார்.
குறித்த நபரை இளைஞர்கள் தேடிச் சென்றபோது சிறிது தூரத்தில் அநாதரவான நிலையில் ஹைஏஸ் வாகனம் ஒன்றைக் கண்டுள்ளனர்.
அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவலை  வழங்கி யுள்ளனர். கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் செல்லாமையால் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் 
வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோப்பாய் பொலிஸாரிடம் சுன்னாகப் பொலிஸார் பொறுப்பைப் பாரப்படுத்தி அவ்வி டத்தைவிட்டுச் சென்றனர்” என்று
 தெரிவித்தனர்.
விசாரணை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் குறித்த ஹைஏஸ் வாகனத்தின் பின்புற கதவைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஏராளமான பணம் மற்றும் தங்க நகைகள் 
காணப்பட்டன.
அதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. விசார ணையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த வாகனத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ள தாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> 
Blogger Templates