வெள்ளி, 26 மே, 2017

மோட்டார் சைக்கில் விபத்தில் வைரவப்புளியங்குளத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் இன்று (23.05.2017) மாலை 5.30மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக மேலும் 
தெரியவருகையில்,
வவுனியாவிலிருந்து குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு அருகே குருமன்காட்டிலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த கப்ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் ( குருமன்காடு மஸ்தான் அரிசி ஆலையின் முகாமையாளர் சேகர் வயது -28) படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

வியாழன், 25 மே, 2017

தாயின் அன்பு கிடைக்காமையால் ஏற்பட்ட விபரீதம்!

மாணவி ஒருவர் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் நேற்று மன்னாரில் 
இடம் பெற்றுள்ளது.
தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரிய வந்தள்ளது.
தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போதே குறித்த சம்பவம் இடம்
 பெற்றுள்ளது.
இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி 
கற்று வருகின்றார்.
குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பை ஒன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை 
நேற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மாணவி வங்காலை புகையிரத கடவையில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதன்போது மாணவி ஸ்தலத்திலேயே
 உயிரிழந்துள்ளார்.
மாணவியின் உடலம் அதே புகையிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, யுவதியின் உடமையும் சோதிக்கப்பட்டது.
இதன் போது 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரிய வருகின்றது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தனக்கு மட்டும் பல்வேறு சோதனைகளும் வேதனைகளும் ஏற்படுவதாகவும், தனது தாய் தன்னை தனியாக தவிக்க விட்டுள்ளதாகவும், அம்மா அம்மா என்று தான் அன்பாக சென்றுள்ள போதும் கல் நெஞ்சம் கொண்ட அம்மாவாக அவர் நடந்து கொண்டுள்ளதாக
 குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு தன்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைப்பதாகவும், தொடர்ந்தும் தனக்கு துரோகம் செய்ய நினைப்தாகவும் குறித்த கடிதத்தில் 
எழுதப்பட்டுள்ளது.
எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது குறித்த மாணவியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் அன்பு கிடைக்காமையினால் மாணவியின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், அனைவர் மனதையும் வேதனை ஏற்படுத்தும் விதமாக மரணம் 
அமைந்துள்ளது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>புதன், 24 மே, 2017

முச்சக்கர வண்டியை 35 வயதுக்கு குறைந்தவர்கள் செலுத்த தடை!

 இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான சட்டம் தொடர்பில் பல்வேறு விடயங்கள் 
பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் 35 வயதிற்கு அதிகமானவர்களுக்கு மாத்திரமே இனி வரும் காலங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் முன்வைத்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானத்திற்கு முன் வந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் முச்சக்கர வண்டிகளினால் ஏற்படுகின்ற விபத்துகளின் அதிகரிப்பு காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>


செவ்வாய், 23 மே, 2017

அடுத்த மாத ஆரம்பத்தில் வடக்கில் தொண்டர் ஆசிரியர் நியமனம்!!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெற்று, ஜூலை மாதம் நியமனம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலக வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தொண்டர்களாகப் பணியாற்றும் ஆசிரியர்களை நிரந்தரமாக்கும் முயற்சிகளை மாகாண கல்வி அமைச்சு மேற்கொண்டிருந்தது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் இரு முறைகள் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டிருந்தது. தற்போது மட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி
 வழங்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கு முன்பு 3 வருடத்தினை சேவைக்காலம் கொண்ட ஆசிரியர்களை மட்டுமே உள்வாங்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நியமனம் வழங்கிய காலத்தில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த 67 பேரும் உரிய
 கல்வித் தகமையினைக் கொண்டிருப்பின் அவர்களிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
2013 ஆம் ஆண்டிற்கு முன்னராக சேவைக்காலம், தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளிற்கு மேற்படாது சேவையாற்றியவர்களாக இருத்தல் வேண்டும். இவ்வாறான தேர்வுகளின் பிரகாரம் இன்று வரையில் பாடசாலைகளில் பணியாற்றுபவர்களாகவும்
 இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்கள் பரீட்சிக்கப்பட்டு அதில் உள்ள தகமைகளையும், காலத்தினையும் தகுதியினையும் கொண்டவர்களிற்கு நியமனத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வட மாகாணத்தில் உள்ள தொண்டராசிரியர்களிடம் ஒப்பந்த ஆசிரியர்கள் சிலரும் இதில் உள்ளடங்குவதாகவும் இவர்களில் 645 பேரே மேற்படி தகமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நிலையில் இருப்பதாக கொழும்பு கல்வி அமைச்சின் பரிந்துரையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில் அடுத்த மாதம் இதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>
புதன், 17 மே, 2017

உயர் தரத்துக்கு தெரிவாகாத 4000மாணவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்!கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதி, உயர் தரத்துக்குத் தகுதி பெறாத 4000 மாணவர்கள் தொழில் கல்விக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் உயர் தர வகுப்புக்களில் உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாணவர்களுக்காக 40 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. உயர் தரத் தொழில் கல்விக்காக 26 பாட விதானங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த சகல பாடவிதானங்களையும் எதிர்வரும் உயர் தர வகுப்பில் அறிமுகம் செய்வதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை கல்வி அமைச்சு தீர்மானிக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது. 
உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா உடனே பரிசோதிக்கவும்

kulirthannirxx
நம் உடல் 70 சதவிகிதம் நீராலானது, சிறிய திசுக்கள் முதல் எலும்புகள் வரை அனைத்திலும் நீர் உள்ளது. உடலில் நீரின் அளவு குறையும்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. நம் ஒவ்வொரு செல்லும் உயிர்வாழ ஆக்சிஜன் அவசியம். எனவே, நீர்த்தேவையை உணர்த்துவதற்கான சமிக்ஞையை, மூளை ஏற்படுத்துகிறது. அதுவே தாகம்.பொதுவாக, ஆரோக்கியமான ஒரு நபருக்கு, தினசரி சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும். மூன்று லிட்டருக்கும் அதிகமாக தண்ணீர் பருகுவதற்கான தாகம் இருந்தால் அதை அதீத தாகம் எனலாம்.அதீத தாகம் என்பது உடலில் ஏதோ பிரச்னை என்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். ஒருவருக்கு சளிப்பிடிப்பதற்கு முன்புகூட அதீதமான தாகம் இருக்கும். இதைத்தவிர, தாகம் மேலும் சில பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். உடலில் உள்ள திரவங்கள் தேவையான அளவு சுரக்காமல், அதில் பற்றாக்குறை ஏற்படும்போது, உடலில் நீரின் அளவு குறைய தொடங்கும்.இதனால் நீர்ப்போக்கு ஏற்பட்டு அதீத தாகம் ஏற்படுகிறது. இதற்கு சில காரணங்கள் உள்ளன . உடல்நிலை சரியாக இல்லாமல் இருப்பது, வெயிலில் அதிக நேரம் அலைவது, வேலை செய்வது, உடல் உபாதைகளால் அதிகமாக வியர்ப்பது, அதிகமாக சிறுநீர் கழிப்பதுரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, சிறுநீரகத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாமல் தவிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் அதீத தாகம் ஏற்படும். எனவே அதீத தாகம் தொடக்க நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொடர்ந்து அதீத தாகம் இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம் உள்ளது.எனவே உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

thannirkudibbathu

நமக்கு தக்காளி பற்றி தெரிந்தது சில! தெரியாதது பல!

mukam
நாம் அன்றாட சமையலில் தக்காளி முக்கிய பங்கினை வகிக்கக்கூடியது. மிக குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடிய தக்காளி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> thakkalibbalam தக்காளியை எப்படி வேண்டுமானாலும் நமது உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் அதன் மருத்துவ பயன்கள் அப்படியே நம்மை வந்து சேரும் mulam தக்காளியினை நம் உணவில் சேர்த்து கொள்வதால் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கூட தவிர்க்க முடியும். தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் நிறமியானது அதன் சிவப்பு நிறத்திற்கு காரணமாகும். இந்த லைகோபீன் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் தன்மையினை உடையது. இது உடலில் உள்ள நச்சினை வெளியேற்றி புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும். mukam மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் விரைவில் சருமம் முதிர்ச்சி அடையாமல் தடுக்கிறது. thakkalibbalam புரோஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் தக்காளியினை சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும் dakdar வாரம் ஒன்றரை கிலோ தக்காளியினை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்ப்பு 20சதவீதம் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. purru பெண்கள் உணவில் அதிகமாக தக்காளியினை சேர்த்து கொள்வதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பபை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கலாம்.
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

  thakkalibbalam

செவ்வாய், 16 மே, 2017

வடக்­கில் பழப் பயிர்ச் செய்­கைக்­கென பய­னா­ளி­கள் தெரிவு

balabbayir1
பழப் பயிர்ச்­செய்கை மற்­றும் பயிர்ச்­செய்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­குப் பய­னா­ளி­க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பய­னா­ளி­க­ளாக இணைந்து பயிர்ச் செய்கை நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட விரும்­பும் விவ­சா­யி­கள் தமது பிரிவு விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர் மற்­றும் விவ­சாய சம்­மே­ள­னங்­க­ளு­டன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சின் நிதி ஒதுக்­கீடு மற்­றும் மத்­திய அரசு நிதி ஒதுக்­கீடு மூலம் இந்த வரு­டம் வடக்கு மாகா­ணத்­தில் மேற்­கொள்­ளப்­ப­டக் கூடிய விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளுக்கு விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர் பிரிவு ரீதி­யா­கப் பய­னா­ளி­கள் தெரி­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. பப்­பா­சிப் பயிர்ச்­செய்கை, தேசிப்­ப­யிர்ச்­செய்கை மற்­றும் மாதுளை, தோடை உள்­ளிட்ட பயிர்­களை உள்­ள­டக்­கிய வள­வி­யல் பயிர்ச்­செய்கை நட­வ­டிக்கை மற்­றும் விவ­சா­யப் பயிர்ச்­செய்கை நட­வ­டிக்­கை­க­ளுக்கு மானிய உத­வி­கள் மற்­றும் உத­வி­கள் ஊக்­கு­விப்­புக்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. வழங்­கப்­ப­ட­வுள்ள உத­வி­கள் மற்­றும் பயிர்­கள், பய­னா­ ளி­க­ளின் எண்­ணிக்கை கொண்ட விவர அட்­ட­வ­ணை­கள் பிரிவு ரீதி­யாக விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு உரிய பய­னா­ளி­க­ளைத் தெரிவு செய்­யு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பய­னா­ளி­க­ளாக இணைந்­துகொள்ள விரும்­பும் விவ­சா­யி­கள் தமது பிரிவு விவ­சாய சம்­மே­ள­னம் மற்­றும் விவ­சா­யப் போத­னா­சி­ரி­யர்­க­ளு­டன் நேரில் தொடர்பு கொண்டு பதி­வு­களை மேற்­கொள்­ளு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

balabbayir1balabbayir

தீராத நோயை தீர்க்கும் சிறந்த கை மருந்து சோற்றுக் கற்றாழை

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து ,
 குணப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை ,
 அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் 
பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
 இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். . இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை 
ஆகும் . சோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம் whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) தயாரிப்பு முறை சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும் தோலை நீக்கிவிடக்கூடாது 
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும் இப்போது மருந்து தயாராகி 
விட்டது மருந்தை உட்கொள்ளும் விதம் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
 மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை 
storage செய்ய கூடாது. இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி
 மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது . இரட்டைப் பேய்மிரட்டி. இது புற்று நோயைக்
 குணப்படுத்தும் மூலிகை. 10 இலைகளை அம்மியில் வெண்ணை போல் அரைத்து 100 மி.லி. பசும்பாலில் கலந்து குடித்து வர மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளியும் குணமடைவார். 48 நாட்கள் மருந்து உட்கொள்வது அவசியம். சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை 
உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 15 மே, 2017

வாழ்களுடன் சினி­மாப் பாணி­யில் வந்தர்களால் யாழ் நககரில் பதட்டம் !

யாழ்ப்பாண நகர் ஸ்ரான்லி வீதியில் நேற்று மு.ப. 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர், இளைஞன் ஒருவ­ரைத் துரத்­தி­ய­தால் அந்­தப் பகு­தி­யில் பதற்­றம் ஏற்­பட்­டது. வாளு­டன் வந்த இரு­வ­ரும் நக­ரில் சாதா­ர­ண­மாக நட­மா­டி­னர்.


மானிப்­பாய் பகு­தி­யைச் சேர்ந்த 21 வயது இளை­ஞன் ஒரு­வ­ரின் பெய­ரில் பதிவு செய்­யப்­பட்ட மோட்­டார் சைக்­கி­ளி­லேயே அவர்­கள் வாளு­டன் நக­ரில் சுமார் 15 நிமி­டங்­கள் நட­மா­டி­னர். அந்­தப் பகு­தி­யால் மற்­றொரு மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த 2 இளை­ஞர்­களை அவர்­கள் துரத்­திச் சென்­ற­னர். வாளு­டன் நட­மா­டிய இரு­வ­ரும் 20 வயது மதிக்­கத்­தக்­க­வர்­கள்.
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸா­ருக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது. எனி­னும் பொலி­ஸார் குறித்த பகு­திக்கு வரு­வ­தற்கு முன்­னரே அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­று­விட்­ட­னர். சினி­மாப் பாணி­யில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தால் ஸ்ரான்லி வீதி­யால் பயணித்தவர்கள் பதற்றமடைந்தனர். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நாட்டில் 20 பிள்ளைகள் –78 பேரக்குழந்தைகள் சாதித்த பெண்

20pillaikal
இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் 20 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தம்புள்ளை – கலேவல பகுதியை சேர்ந்த 78 வயதான எச்.ஏ.ரொசலின் நோனா என்ற பெண்மணி 20 பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்த தாயாரின் கணவருக்கு 86 வயதாகின்றது. இந்த தம்பதிகளுக்கு 78 பேரக்குழந்தைகள் உள்ளனர். எனினும் 20 குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக தான் ஒரு போதும் வைத்தியசாலைக்கு செல்லவில்லை என குறித்த தாயார் தெரிவித்துள்ளார். கணவர் கூலி வேலை செய்தமையினால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது பிள்ளைகளை வளர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். 20 பிள்ளைகள் அல்ல 24 பிள்ளைகளை இந்த உலகில் பெற்றெடுப்பதற்கு தான் எதிர்பார்த்ததாகவும், எனினும் வைத்தியர்களின் ஆலோசனையினால் அந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 20 பிள்ளைகளை இந்த உலகில் பெற்றதெடுத்தமை குறித்து தான் மிக்க மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதும் தனது கணவருடன் ஆரோக்கியமாக வாழ்வதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உலக அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அதனை பெருமைப்படுத்தும் வகையில் 78 வயது தாயின் தகவல் வெளியாகி உள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
20pillaikal

ஞாயிறு, 14 மே, 2017

அன்னையர் தினத்துக்காக ஜெசிகா சமர்ப்பணம் செய்த பாடல்!

உலகிலுள்ள அனைத்து அன்னையர்களையும் போற்றும் நாளான “அன்னையர் தினம்” இன்று (14.05.2017) அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்காகவும் “உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே…” என்ற பாடலை ஈழத்துச்சிறுமி ஒருவர் சமர்ப்பணமாக வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் கனடா வாழ் ஈழத்துச் சிறுமி ஜெசிகா (Jessica Judes) இரண்டாவது இடம் பிடித்தார்.அவரே “உயிரும் நீயே, உடலும் நீயே…” என்ற பாடலை அன்னையர் தினத்துக்காக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 13 மே, 2017

அறிமுகமாகின்றது இலங்கையில் அதிநவீன பேருந்து!

navinabu2
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது. இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட அம்சமாகும். அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட நவீன பேருந்தில் படுக்கை அறை, குளிக்கும் அறை, உணவு அறை மற்றும் வீட்டு பொருட்கள் அடங்கிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கு சபாரி ரக மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துவதற்கான நிறுத்துமிட வசதியும் காணப்படுகின்றது. 40 அடி நீளமான இந்த பஸ் வண்டி இலங்கை பெறுமதியில் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா துறைக்கு சொந்தமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரினால் இந்த பேருந்த இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

navinabu3

navinabu2

navinabu1

navinabus

வெள்ளி, 12 மே, 2017

ஆபத்தை விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்கள்

alakusathanabborulkal1
அழகுசாதனப் பொருட்கள்… இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான சமாசாரமாகிவிட்டன. அழகாக இருக்க எல்லோரும் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அழகுசாதனப் பொருட்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன… மணமூட்டுவதற்கும், நிறமேற்றுவதற்கும், அழகு சேர்க்கவும் இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன…! இவை பாதுகாப்பானவைதானா… உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுத்துபவையா…? என்பதை எல்லாம் நாம் யோசிப்பதில்லை. உலகில் இது தொடர்பாக அதிகம் ஆய்வுகளும் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை..பல அழகுசாதனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை. அழகுசாதனப் பொருட்கள் என்ன செய்யும்? ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்… நெயில் பாலீஷ்… குழந்தைகளுக்குப் பிடித்த அழகுசாதனப் பொருள். இதில் காரீயம் கலக்கப்படுகிறது. இது, குழந்தைகளின் மூளைத் திறனையே பாதிக்கக்கூடியது. * பல மணமூட்டிகளில் (சென்ட்) உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), நரம்பைப் பாதிக்கும் ஒரு நச்சுப் பொருள். * அதேபோல மணமூட்டிகள், அழகூட்டிகளில் சேர்க்கப்படும் எத்தலின் ஆக்ஸைடு (Ethylene oxide) ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இப்படி `உலகம் எங்கும் தயாராகும் அழகுசாதனப் பொருட்களில், 22 சதவிகிதப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருக்கின்றன’ என எச்சரிக்கிறது `ஸ்கின் டீப்’ என்ற அமைப்பு. பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவம் எய்துவதற்கும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் அழகூட்டிகளில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்குமோ என்கிற ரீதியிலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. `தாலேட்’ (Phthalate) எனும் முகத்தில் மேக்கப்பை நிறுத்தும் ரசாயனம், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Hydrocarbon) ஆகியவை ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அஞ்சப்படுபவை. ஆனாலும், இன்று வரை நம் சந்தையில் விற்பனையில் உள்ளவை. ஐந்து வயதேயான குழந்தைக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து, முகத்தில் ஸ்க்ரப் செய்து, பாலீஷ் போட்டு, ஸ்ப்ரே அடித்து, காற்றுப் புகாத பளபள ஆடை அணிவித்து நடத்தும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அந்தக் குழந்தையின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். * `ஆர்கானிக்’ என்கிற பெயரில் விற்கப்படும் பொருட்களிலும் எச்சரிக்கை தேவை. விற்பனை உத்திக்காக மட்டுமே பல பொருட்களில் `ஆர்கானிக்’ என்கிற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை ஷாம்பூக்களில், சோடியம் லாரல் சல்பேட் (Sodium Lauryl Sulfate) கலக்கப்படாதவை மிக மிக அரிதானவை. கொஞ்சம் ரசாயனம், சிறிது மூலிகை’ என்ற கலப்பில் வருபவைதான் அதிகம். `ஆர்கானிக் என உலக அளவில் விற்கக்கூடிய அழகூட்டிகளில் பத்து சதவிகித மூலப் பொருட்கள் மட்டுமே ஆர்கானிக்’ என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் `செர்டெக்’ (Certech) அமைப்பு. அதிலும், குழந்தைகளுக்காக விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகின்றன என்றும் இந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது. `அழகுசாதனப் பொருட்கள் எல்லாம் மேலே பூசுவதற்குத்தான். அவை உடலுக்குள் செல்லாது’ என நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ் (Phthalate Plastcizers) மற்றும் பாரபென்கள் (க்ரீம்கள், ஷாம்பூக்கள் போன்ற அழகுசாதனப் பொருட்கள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ்), அதோடு நிறமூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சில மணமூட்டிகளும், சன் ஸ்கிரீனர்களும் விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம் . அதிகமாக உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொள்ளும் ஆண்கள் அதைத் தவிர்க்கவும். சன் ஸ்கிரீன் பூசித் திரிபவர்களுக்கு, வைட்டமின் டி குறைபாடும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். கறுப்பாக இருப்பவர்களை கேலி செய்வதும், இழிவாகப் பார்ப்பதும் அறியாதவர்கள் செய்யும் வேலை. குழந்தைகளுக்கு கறுப்பு என்கிற அழகை ரசிக்கவிடாமல், பௌடர் போட்டு, க்ரீம் பூசி வளர்ப்பது, சிறு வயதிலேயே கறுப்பு நல்லதில்லையோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். கறுப்பு அழகு, ஆரோக்கியம் என்பதை குழந்தைப் பருவம் முதலே விதைக்கவேண்டியிருக்கிறது. அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமல்ல. குழந்தையின் பாசம், கணவரின் கரிசனம், அம்மாவின் பரிவு, காதலியின் அன்பு எல்லாமே அழகுதான். எனவே அழகுசாதனப் பொருட்கள் விளைவிக்கும் தீங்குகளைப் புரிந்துகொள்வோம். இயற்கையே அழகு என்பதையும் அறிந்துகொள்வோம். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> alakusathanabborulkal alakusathanabborulkal1

வியாழன், 11 மே, 2017

தனியார் பகுதி நேர வகுப்புகள் ஞாயிறு தினங்களில் தடை!

manavar t
ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளை பிற்பகல் 2 மணி வரை தடை செய்யும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஞாயிறு தினங்களில் அறநெறி வகுப்புகள் கட்டாயமாக்கப்படும் யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஹபரணை சினமன் லொஜ் ஹொட்டலில்
 நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற 33வது முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

manavar t

செவ்வாய், 9 மே, 2017

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வுசெல்வி .லோவிதன் ஜஸ்மிதா 9.05.17

jasmitha lx

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் இரண்டாவது பிறந்த நாள் 9.05.2017 இன்று . தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார் மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்
இணையங்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து கலைகளும்கற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்தினார்கள் எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றன உன் பிறந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று… இன்னுமோர் ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய் வாழ வாழ்த்துகிறோம் வாழ்கவளமுடன்.ஐய்யா அப்பம்மா 
jasmitha lxx jasmitha lx
 
Blogger Templates