பழப் பயிர்ச்செய்கை மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பயனாளிகளைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயனாளிகளாக இணைந்து பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் தமது பிரிவு விவசாயப் போதனாசிரியர் மற்றும் விவசாய சம்மேளனங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு மூலம் இந்த வருடம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய விவசாய நடவடிக்கைகளுக்கு விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாகப் பயனாளிகள் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பப்பாசிப் பயிர்ச்செய்கை, தேசிப்பயிர்ச்செய்கை மற்றும் மாதுளை, தோடை உள்ளிட்ட பயிர்களை உள்ளடக்கிய வளவியல் பயிர்ச்செய்கை நடவடிக்கை மற்றும் விவசாயப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு மானிய உதவிகள் மற்றும் உதவிகள் ஊக்குவிப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
வழங்கப்படவுள்ள உதவிகள் மற்றும் பயிர்கள், பயனா ளிகளின் எண்ணிக்கை கொண்ட விவர அட்டவணைகள் பிரிவு ரீதியாக விவசாயப் போதனாசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உரிய பயனாளிகளைத் தெரிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளாக இணைந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் தமது பிரிவு விவசாய சம்மேளனம் மற்றும் விவசாயப் போதனாசிரியர்களுடன் நேரில் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக