ஞாயிறு, 14 மே, 2017

அன்னையர் தினத்துக்காக ஜெசிகா சமர்ப்பணம் செய்த பாடல்!

உலகிலுள்ள அனைத்து அன்னையர்களையும் போற்றும் நாளான “அன்னையர் தினம்” இன்று (14.05.2017) அனைவராலும் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்காகவும் “உயிரும் நீயே, உடலும் நீயே, உறவும் நீயே, தாயே…” என்ற பாடலை ஈழத்துச்சிறுமி ஒருவர் சமர்ப்பணமாக வெளியிட்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் “சூப்பர் சிங்கர் 4” நிகழ்ச்சியில் கனடா வாழ் ஈழத்துச் சிறுமி ஜெசிகா (Jessica Judes) இரண்டாவது இடம் பிடித்தார்.அவரே “உயிரும் நீயே, உடலும் நீயே…” என்ற பாடலை அன்னையர் தினத்துக்காக பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 13 மே, 2017

அறிமுகமாகின்றது இலங்கையில் அதிநவீன பேருந்து!

navinabu2
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில் அறிமுகமாகவுள்ளது. இந்த பேருந்து நடமாடும் வீடொன்றிற்கு சமமானதென்பது விசேட அம்சமாகும். அனைத்து விதமான வசதிகளையும் கொண்ட நவீன பேருந்தில் படுக்கை அறை, குளிக்கும் அறை, உணவு அறை மற்றும் வீட்டு பொருட்கள் அடங்கிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கு சபாரி ரக மோட்டார் வாகனம் ஒன்றை நிறுத்துவதற்கான நிறுத்துமிட வசதியும் காணப்படுகின்றது. 40 அடி நீளமான இந்த பஸ் வண்டி இலங்கை பெறுமதியில் 23 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா துறைக்கு சொந்தமான கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரினால் இந்த பேருந்த இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

navinabu3

navinabu2

navinabu1

navinabus

வெள்ளி, 12 மே, 2017

ஆபத்தை விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்கள்

alakusathanabborulkal1
அழகுசாதனப் பொருட்கள்… இன்றைக்கு ஆண்கள், பெண்கள் இருபாலினரும் பயன்படுத்தும் அத்தியாவசியமான சமாசாரமாகிவிட்டன. அழகாக இருக்க எல்லோரும் ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அழகுசாதனப் பொருட்கள் எப்படித் தயாரிக்கப்படுகின்றன… மணமூட்டுவதற்கும், நிறமேற்றுவதற்கும், அழகு சேர்க்கவும் இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன…! இவை பாதுகாப்பானவைதானா… உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுத்துபவையா…? என்பதை எல்லாம் நாம் யோசிப்பதில்லை. உலகில் இது தொடர்பாக அதிகம் ஆய்வுகளும் நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை..பல அழகுசாதனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பவை. அழகுசாதனப் பொருட்கள் என்ன செய்யும்? ஆபத்தை விளைவிக்கும் பின்னணிச் செய்திகள்… நெயில் பாலீஷ்… குழந்தைகளுக்குப் பிடித்த அழகுசாதனப் பொருள். இதில் காரீயம் கலக்கப்படுகிறது. இது, குழந்தைகளின் மூளைத் திறனையே பாதிக்கக்கூடியது. * பல மணமூட்டிகளில் (சென்ட்) உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), நரம்பைப் பாதிக்கும் ஒரு நச்சுப் பொருள். * அதேபோல மணமூட்டிகள், அழகூட்டிகளில் சேர்க்கப்படும் எத்தலின் ஆக்ஸைடு (Ethylene oxide) ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இப்படி `உலகம் எங்கும் தயாராகும் அழகுசாதனப் பொருட்களில், 22 சதவிகிதப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருக்கின்றன’ என எச்சரிக்கிறது `ஸ்கின் டீப்’ என்ற அமைப்பு. பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவம் எய்துவதற்கும், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கும் அழகூட்டிகளில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக இருக்குமோ என்கிற ரீதியிலும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. `தாலேட்’ (Phthalate) எனும் முகத்தில் மேக்கப்பை நிறுத்தும் ரசாயனம், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன் (Polycyclic Hydrocarbon) ஆகியவை ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அஞ்சப்படுபவை. ஆனாலும், இன்று வரை நம் சந்தையில் விற்பனையில் உள்ளவை. ஐந்து வயதேயான குழந்தைக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து, முகத்தில் ஸ்க்ரப் செய்து, பாலீஷ் போட்டு, ஸ்ப்ரே அடித்து, காற்றுப் புகாத பளபள ஆடை அணிவித்து நடத்தும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அந்தக் குழந்தையின் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். * `ஆர்கானிக்’ என்கிற பெயரில் விற்கப்படும் பொருட்களிலும் எச்சரிக்கை தேவை. விற்பனை உத்திக்காக மட்டுமே பல பொருட்களில் `ஆர்கானிக்’ என்கிற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை ஷாம்பூக்களில், சோடியம் லாரல் சல்பேட் (Sodium Lauryl Sulfate) கலக்கப்படாதவை மிக மிக அரிதானவை. கொஞ்சம் ரசாயனம், சிறிது மூலிகை’ என்ற கலப்பில் வருபவைதான் அதிகம். `ஆர்கானிக் என உலக அளவில் விற்கக்கூடிய அழகூட்டிகளில் பத்து சதவிகித மூலப் பொருட்கள் மட்டுமே ஆர்கானிக்’ என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் `செர்டெக்’ (Certech) அமைப்பு. அதிலும், குழந்தைகளுக்காக விற்கப்படும் ஆர்கானிக் நேச்சுரல் அழகூட்டிகளில் 35 சதவிகிதம் கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகின்றன என்றும் இந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது. `அழகுசாதனப் பொருட்கள் எல்லாம் மேலே பூசுவதற்குத்தான். அவை உடலுக்குள் செல்லாது’ என நினைக்க வேண்டாம். தாலேட் பிளாஸ்டிசைசர்ஸ் (Phthalate Plastcizers) மற்றும் பாரபென்கள் (க்ரீம்கள், ஷாம்பூக்கள் போன்ற அழகுசாதனப் பொருட்கள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ்), அதோடு நிறமூட்டுவதற்காகச் சேர்க்கப்படும் நானோ துகள்கள் ஆகியவை உடலுக்குள் உறிஞ்சப்படுவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் சில மணமூட்டிகளும், சன் ஸ்கிரீனர்களும் விந்தணுக்களின் எண்ணிக்கையைக்கூடக் குறைக்குமாம் . அதிகமாக உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொள்ளும் ஆண்கள் அதைத் தவிர்க்கவும். சன் ஸ்கிரீன் பூசித் திரிபவர்களுக்கு, வைட்டமின் டி குறைபாடும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும். கறுப்பாக இருப்பவர்களை கேலி செய்வதும், இழிவாகப் பார்ப்பதும் அறியாதவர்கள் செய்யும் வேலை. குழந்தைகளுக்கு கறுப்பு என்கிற அழகை ரசிக்கவிடாமல், பௌடர் போட்டு, க்ரீம் பூசி வளர்ப்பது, சிறு வயதிலேயே கறுப்பு நல்லதில்லையோ என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். கறுப்பு அழகு, ஆரோக்கியம் என்பதை குழந்தைப் பருவம் முதலே விதைக்கவேண்டியிருக்கிறது. அழகு என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமல்ல. குழந்தையின் பாசம், கணவரின் கரிசனம், அம்மாவின் பரிவு, காதலியின் அன்பு எல்லாமே அழகுதான். எனவே அழகுசாதனப் பொருட்கள் விளைவிக்கும் தீங்குகளைப் புரிந்துகொள்வோம். இயற்கையே அழகு என்பதையும் அறிந்துகொள்வோம். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> alakusathanabborulkal alakusathanabborulkal1

வியாழன், 11 மே, 2017

தனியார் பகுதி நேர வகுப்புகள் ஞாயிறு தினங்களில் தடை!

manavar t
ஞாயிறு தினங்களில் தனியார் பகுதி நேர வகுப்புகளை பிற்பகல் 2 மணி வரை தடை செய்யும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஞாயிறு தினங்களில் அறநெறி வகுப்புகள் கட்டாயமாக்கப்படும் யோசனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஹபரணை சினமன் லொஜ் ஹொட்டலில்
 நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற 33வது முதலமைச்சர்கள் மாநாட்டில் இந்த யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன
  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

manavar t

செவ்வாய், 9 மே, 2017

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வுசெல்வி .லோவிதன் ஜஸ்மிதா 9.05.17

jasmitha lx

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் இரண்டாவது பிறந்த நாள் 9.05.2017 இன்று . தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார் மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்
இணையங்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து கலைகளும்கற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்தினார்கள் எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றன உன் பிறந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று… இன்னுமோர் ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய் வாழ வாழ்த்துகிறோம் வாழ்கவளமுடன்.ஐய்யா அப்பம்மா 
jasmitha lxx jasmitha lx

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அறிவோம் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

vnb
சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும். மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும். எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா? அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். வெண்டைக்காயின் சத்துக்கள் வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெண்டைக்காய் தண்ணீர் சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சர்க்கரை நோயை விரட்டும் சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர். மருத்துவ ஆய்வு வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது. வறுத்த வெண்டைக்காய் விதை துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது. கொலஸ்ட்ரால் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம். நோயெதிர்ப்பு சக்தி நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும். சிறுநீரக நோய்கள் சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும். ஆஸ்துமா முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கு இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>> vnb vandikkaai

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

யாழ். நகர் முதல் அந்தஸ்தை பெறப்போகின்றது

y1
இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உலக வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவதனால், பிற்காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகளை கவரும் என்றும், அவர்களுடைய வருகையானது அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் எனவும், யாழில் உள்ள மக்கள் இலகுவான முறையில் பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> y1

திங்கள், 3 ஏப்ரல், 2017

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/
இணையங்களும் வாழ்த்துகின்றன





  1.  http://www.navakkri.com/?cat=27 
  2.  http://www.navakkri.com/?cat=1 
  3.  http://www.navakkri.com/?cat=19 
  4.  http://www.navakkri.com/?cat=6


சனி, 1 ஏப்ரல், 2017

நவக்கிரி .நிலாவரை புகைப்பாடங்கள்



Du kannst Bilder nach deinen Vorstellungen beschneiden, nachdem du Neues Bild hinzufügen angeklickt hast. Dein Theme empfiehlt jedoch eine Größe von 1000 × 250 Pixel für den Header. Aktuelles Header-Bild







mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm nilavarai.com lokko

 navakkiri.com lokko
nmp
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஓர் பக்திப்பாடல் இணைப்பு நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் பாடல் (1)

வெள்ளி, 31 மார்ச், 2017

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா

nmpt14b
வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. இன்று.14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார்கள் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின் நிழல் படங்கள் இணைப்பு .. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> nmpt14b8 nmpt14b1 nmpt14b11 nmpt14b12 nmpt14b13 nmpt14b14 nmpt14b15 nmpt14b16
 
Blogger Templates