செவ்வாய், 4 ஏப்ரல், 2017

யாழ். நகர் முதல் அந்தஸ்தை பெறப்போகின்றது

y1
இலங்கையில் முதன் முறையாக சைக்கிள்களுக்கு பிரத்தியோக பாதை கொண்ட நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படவுள்ளது. உலக வங்கி வழங்கிய 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் பல வேலைத்திட்டங்கள் யாழ். நகரில் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களை இணைக்கும் வகையில் குறித்த பாதை அமைக்கப்படவுள்ளது. பல்வேறு இடங்களை சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பார்வையிடக்கூடிய வசதியுடன் 20 கிலோமீற்றர் தூரம் வரையில் இந்த பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வீதி அமைக்கப்படுவதனால், பிற்காலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகளை கவரும் என்றும், அவர்களுடைய வருகையானது அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் எனவும், யாழில் உள்ள மக்கள் இலகுவான முறையில் பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> y1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates